கோவிட்-19 பேரிடர் காலத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது தன்னார்வத்துடன் சேவையாற்றிய இளைஞரை கௌரவிக்கும் வகையில், இலவசமாக ஹஜ் யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா உயிரிழப்புகளை நல்லடக்கம் செய்யும் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட இளைஞர் குழுவினரால், தங்களுக்குள் இருந்து, மௌலவி சமீம் ஸலாமி என்ற இளைஞரின் பெயர் இந்த வாய்ப்புக்காக முன்மொழியப்பட்டது.
அதற்கமைய, அவருக்கான விமான பயணச்சீட்டுகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு, முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களினால் நேற்று (04.05.2026 )சமய மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.


