( ஐ. ஏ. காதிர் கான் )
திஹாரிய, பண்டாரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஆர். குல்ஸார் அஹ்மத், ஏப்ரல் 30 ஆம் திகதி அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில், நீதிவான் பீ.டப்ளியூ.என்.டி. பியரத்ன முன்னிலையில், கம்பஹா மாவட்டத்திற்கான சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கொழும்பு - நாவல திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டப் பின் படிப்பை மேற்கொண்டு வரும் இவர், சில்மியாபுர ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபை முன்னாள் தலைவர் அல்ஹாஜ் முஹம்மத் ரஸ்ஸாக் (ஜேபி) - ஹாஜியானி நூருல் ஹனீனா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராவார்.
இவர், ப/சில்மியாபுர அல் - முர்ஷித் மகா வித்தியாலயம், வறக்காப்பொல தாருள் ஹஸனாத் கலாபீடம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
மனிதவள முகாமைத்துவம், கணனி, கணக்கியல், உளவியல் போன்ற துறைகளிலும் இவர், டிப்ளோமோ கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட்ட ஒக்ஸ்போட் சர்வதேச கல்லூரியின் உரிமையாளரும் பணிப்பாளருமான இவர், பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

