ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவமற்ற நிதி உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ், அத்தனகல்ல பிரதேச செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், மருத்துவ உதவிகளுக்காக விண்ணப்பித்தல் மற்றும் மருத்துவமற்ற நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் செயல்முறை தற்போது பிரதேச செயலகங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைத் தத்தமது பிரதேசங்களிலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsfund.gov.lk என்ற முகவரிக்கு விஜயம் செய்யவும்.
(அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம்)

