கொழும்பு: இலங்கையின் இலக்கியத் துறையில் கால்பதிக்கத் துடிக்கும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் “தேசிய கையெழுத்துப் பிரதிப் போட்டி - 2026” இனை அறிவித்துள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறவுள்ள இப்போட்டியானது, படைப்பாளிகளின் திறமைகளை தேசிய மட்டத்தில் அங்கீகரிப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
போட்டிப் பிரிவுகள்
விண்ணப்பதாரர்கள் பின்வரும் நான்கு பிரதான துறைகளின் கீழ் தங்களது கையெழுத்துப் பிரதிகளைச் சமர்ப்பிக்க முடியும்:
நாவல்
சிறுகதை
கவிதைத் தொகுப்பு
இளையோர் நாவல்
முக்கிய விதிமுறைகள்
ஒரு விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பிரிவிற்கோ அல்லது அனைத்துப் பிரிவுகளுக்கோ விண்ணப்பிக்க முடியும்.
ஆயினும், ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் (உதாரணமாக 'நாவல்' பிரிவு) ஒரு படைப்பை மாத்திரமே சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும்.
இப்போட்டித் தொடருக்காக 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபம் தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய நிபந்தனைகளின் கீழ் படைப்புகள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை
சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை 2026 ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலிலோ அல்லது நேரடியாகவோ ஒப்படைத்தல் வேண்டும்:
முகவரி:
கலாசார அலுவல்கள் பணிப்பாளர்,
கலாசார அலுவல்கள் திணைக்களம் (வெளியீட்டுப் பிரிவு),
8 வது மாடி, செத்சிரிபாய,
பத்தரமுல்ல.
குறிப்பு: கையெழுத்துப் பிரதி அனுப்பப்படும் உறையின் இடது மேல் மூலையில் “தேசியக் கையெழுத்துப் பிரதிப் போட்டி - 2026” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவம்
போட்டி நிபந்தனைகள் அடங்கிய சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பப்படிவத்தை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.culturaldept.gov.lk ஊடாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

