உயர்தரத்தில் சாதித்த மள்வானை அல்-முபாரக் மாணவர்களுக்கு மடிக்கணினி, நினைவுச்சின்னங்கள் வழங்கி பாராட்டு!

Rihmy Hakeem
By -
0


 மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கல்வி புலமை பரிசில், மடிக்கணணிகள், நினைவுச்சின்னம் கௌரவிக்கப்பட்டனர் 


கடந்த வருடத்தில் உயர்தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 26.5.2026 செவ்வாய்க்கிழமை மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.


அல்ஹாஜ் இஸ்மாயில் கேட்போர் கூடத்தில் அதிபர் முஹம்மத் நயீம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவர் அல்ஹாஜ் முஹம்மத் இஷ்ஃபாக் (CEO - DYNAWASH) கலந்து சிறப்பித்தார்.


இதன் போது மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக விஞ்ஞான துறையில் 3A சித்தி பெற்ற மாணவிகளுக்கு DYNAWASH நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 9 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.


அத்தோடு இந்த மாணவிகளுக்கான 02 அதிநவீன மடிக்கணணிகளை சஹாரா நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அல்ஹாஜ் பாஸுல் ஜிப்ரி சார்பாக அவர்களின் குழுவினர் வழங்கி வைத்தார்கள்.


மேலும் கடந்த வருடங்களில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்குமான நினைவுச் சின்னங்கள் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டன. 


இதற்கு மேலதிகமாக கடந்த வருடங்களில் அந்த மாணவர்களுக்கு உயர்தர வகுப்பில் கற்பித்த ஆசிரியர்களுக்கான பரிசில்களையும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் வழங்கி வைத்தது.


நிகழ்வுகளில் கலந்துகொண்ட அதிதிகள், பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாணவர்களையும் படத்தில் காணலாம்.


நன்றி - மள்வானை நியூஸ்












கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)