கல்வி முன்னேற்றம் மற்றும் ஒழுக்கவியல் சவால்கள் குறித்த முக்கிய கலந்துரையாடல்களுடன் கஹட்டோவிட்ட அல் பத்ரியாவின் வருடாந்த பொதுக்கூட்டம் நிறைவு.

Rihmy Hakeem
By -
0

கஹட்டோவிட்ட அல் பத்ரியாவின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்புடன் நிறைவு. 




கஹட்டோவிட்ட அல் பத்ரியாவின் வருடாந்த பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் , பாடசாலை நலன் விரும்பிகளுக்கான வராடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டம் நேற்று மு. ப 9.30 மணியளவில் பாடசாலை அதிபர் கௌரவ எம். ஏ. எம் அஸ்மிர் அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது. 


இதில் கடந்த ஆண்டுக்கான கணக்கறிக்கை மற்றும் எதிர்வரும் வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமான செலவினங்களுக்கான பாதீட்டு விபரமும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினரும் , ஆசிரியருமான ரம்ஸான் அவர்களால் சபையில் முன்வைக்கப்பட்டது இதில் காணப்பட்ட திருத்தங்களை சசையோர் சுட்டிக்காட்டியதோடு அதில் தெளிவு படுத்தும் படி வேண்டிய விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டதோடு உரிய திருத்தங்களோடும் , தெளிவுகளோடும் கணக்கறிக்கைகள் சபையோரால் முன்மொழிந்து வலி மொழியப்பட்டது. 


இதனை தொடர்ந்து மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான ஆழமான சிந்திக்க தூண்டுகின்ற பல முக்கிய விடயங்களுடன் கூடிய ஒழுக்கவியல் சார்ந்த தற்போது பாடசாலையில் மாணவர்களிடம் காணப்படும் ஒழுக்க நெறிபிறழ்வு மற்றும் எதிர்மறை நடத்தை மாற்றம் ஒழுக்க வியல் வீழ்ச்சி ,பண்பாடு ,ஆசிரியர் அவமதிப்பு ,நாகரிகமற்ற பேச்சு வழக்குகள்  என்று இன்னோரன்ன ஒழுக்கவியல் சார்ந்த பிரச்சினைகளை தற்போது சவாலாக முகங்கொடுத்து வருவதாகவும் இதனை நிவர்த்திக்க வேண்டுமெனில் பெற்றோர்களும் பாடசாலையும் பள்ளிவாசல்களும் இணைந்தும் அதற்கு மேலதிகமாக ஊர்பள்ளிவாசல்களினாலும் இதற்கான முக்கியத்துவத்தை வழங்கி சன்மார்க்க ரீதியில் இது தொடர்பான வழிகாட்டல்கள் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தவேண்டிய அவசியம் குறித்தும் பாடசாலையில் ஒழுக்கவியல் சார் துறைக்கு பொறுப்பாகவுள்ள குழு சார்பில் ஆசியர் மொஹிதீன் பல  விடயங்களை சபையோர் முன்னிலையில் முன்வைத்தார்.


இந்த கூட்டத்தில் விசேட அதிதியாக கம்பஹா மற்றும் மினுவங்கொடை வலய தமிழ் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பணிப்பாளர் அஷ்ஷேய்கு  எம்.டி.எம் தௌஸீர் மற்றும் கஹட்டோவிட்ட பத்ரியாவுக்கு பொறுப்பாகவுள்ள ஆசிரிய ஆலோசகர் எம். டி. எம் ஸயான் ஆசிரிர் போன்றோரும் கலந்து கொண்டதோடு பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் ஒழுக்க வீழ்ச்சி இங்கு மாத்திரமல்ல நாட்டில் எல்லா பாடசாலைகளிடையே காணப்படும் ஒன்று எனவும் சில வேளை முஸ்லிம்களுக்கென பிரத்தியேக பாடசாலை அவசியமா? என்பது குறித்து தான் சிந்திப்பதுண்டு எனவும் அதற்கு காரணம் நமது சமூகத்தின் பாடசாலைகளிலும் நிறுவனங்களிலுமே அதிக பிரச்சினைகளும் சர்ச்சைகளும் ,ஒழுக்கவீழ்ச்சிகளும் தற்போது பேசிபொருளாகியுள்ளது எனவும் இதனை விட பெரும்பான்மை சமூகத்தின் பிரச்சினைகளோ விமர்சனங்களோ நமது சமூகம் சார்ந்த நிறுவனங்களில் அவ்வாறு காண்பது குறைவு  எனவும்,


 எல்லாவற்றுக்கும் தீர்வு தரும் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றிவரும் சமூகத்தில் இந்தளவு தூரம் பிரச்சினைகள் சமூகத்தால் பேசுபொருளாகியுள்ளமை கவலைக்கிடமானது என்றும் சுட்டிக்காட்டியதோடு , பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அவர்களின் பொறுப்புக்கள் கடமைகள் பற்றியும் இங்கே உரை நிகழ்த்திய பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷேய்க் தௌஸீர் அவர்கள் விளக்கமளித்தார். 


இதனைத்தொடர்ந்து பாடசாலை அதிபர் எம் ஏ. எம். அஸ்மிர் உரை நிகழ்த்தினார். அதிபர் தனதுரையில் பாடசாலை சமீப காலமாக அடைந்து வரும் கல்வி முன்னேற்றம் , பெறுபேற்று அடைவு குறித்து உரிய புள்ளிவிபரம் மற்றும் வரைபுகளுடன் பவர் பொயிண் சமர்ப்பிப்பாக சபையில் முன்வைத்து விளக்கமளித்தார். 


மேலும் ஆசிரியர் மொஹிதீன் அவர்கள் முன்வைத்த ஒழுக்கவியல் சவால்கள் குறித்தும் தனது அவதானத்தை செலுத்தியதோடு தற்போது காணப்படும் பெரிய பிரச்சினையாகவும் இதற்கான தீர்வை பாடசாலையினால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது எனவும் பெற்றோர்களும், ஊரிலுள்ள பள்ளிவாசல்களும் இதற்காக ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 


மேலும் சபையோர் எழுப்பிய பல கேள்விகளுக்கும் அதிபர் விளக்கமளித்ததோடு , புதிய பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கான  பொறுப்புக்கள் , கடமைகள் குறித்தும் சுட்டிக்காட்டினார். 


இதனையடுத்து புதிய அபிவிருத்தி சங்க உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. 


இம்முறை பாடசாலை அபிவிருத்தி சங்கத்துக்கு தெரிவான உறுப்பினர்கள் விபரம் வருமாறு. 


1.மொஹம்மத் ஷிஹான்

2.மொஹம்மத் ரிபாஸ்

3.மொஹம்மத் பிஸ்தாமி

4.மொஹம்மத் ஸப்ராஸ்

5.மொஹம்மத் ஸாஜித்


இவர்கள் தவிர ஏற்கனவே இருந்த உறுப்பினர்களில் சிலர் சபையோரால் மீண்டும் பிரேயரிக்கப்பட்ட போதும் அவர்கள் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த பிரேரணையை வாபஸ் பெற்று கொண்டனர். 


இதனையடுத்து கடந்த அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் மொஹம்மத் ரம்ஸான் அவர்களினால் நன்றி தெரிவிக்கும் உரையும் நிகழ்த்தப்பட்டது. 


இதனை தொடர்ந்து  முன்னால் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து 

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் அண்மையில் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 90%சித்தி அடைவை முன்னிட்டு அதிபருக்கு விசேட நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்கள்.


இதனையடுத்து சபையோர் கருத்துக்கான நேரம் வழங்கப்பட்டது.


இதில் சகோதரர் லுதுபுள்ளாஹ் பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் குருங்காழுக்கள் மற்றும் ஓரம் கேட்டல்,களவு சாட்டல் உட்பட ஆசிரியர்களது பிள்ளைகள் மற்றும் ஏனைய பிள்ளைகளுக்கான பிரச்சினை தீர்க்கும் அனுகுமுறைகள் குறித்து மிக கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாணவர்களிடையே வெறுப்பேற்படுத்தும் நிலைமை தவிர்த்து அனைவரும் ஒரே வகுப்பு  நண்பர்கள்  என்ற சகோதரத்துவ வாஞ்சையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினதோடு ஒழுக்கவியல் மற்றும் நெறிபிறழ்வு விடயங்ஙளை கையாள்வற்காக பெற்றோர்கள்,அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் கங்கணம் பள்ளிவாசல்களின் நிர்வாக பிரதிநிதிகள் பாதுகாப்பு கமிட்டிஉறுப்பினர்கள் போன்ற அனைத்து தரப்பையும் கொண்ட ஒரு கமிட்டியினர் மூலம் பாடசாலை எதிர்கொண்டு வரும் ஒழுக்கவியல் சவால்களுக்கான தீர்வுகளை காண முடியும் எனவும் தனது ஆலோசனைகளாக சபையில் முன்வைத்தார்.


சபையோர் கருத்து சொல்வதற்காக பியாஸ்மொஹம்மத் அவர்களும் மேடையேறியதுடன் அவர் தனது கருத்தில் மாஸ்டர் பிளான் என்பது பௌதீக வளம் சார் விடயங்கள் மாத்திரமல்ல இன்னும் இருந்தாண்டில் அல்லது ஐம்ததாண்டில் பத்ரியா எங்கு இருக்க வேண்டும் அதற்கான திட்டங்கள் இலக்குகள் குறித்த வரைவுகளும் மாஸ்டர் பிளான்களாக தயாரிக்கப்பட வேண்டும் எனவும் வரும் ஒவ்வொரு அதிபர்களும் முன்னால் அதிபர் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து திட்ட அமுல்நடத்தலை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும் எனவும்  இதனோடு மற்றும் சில ஒழுக்கவியல் சார் ஆலோசனைகளையும் குறிப்பிட்டார் .


சபையோர் கருத்து சார்பில் ஆசிரியர் இக்பால் நாஸர் அவர்களும் கருத்து தெரிவித்தார்.


இதனையடுத்து கூட்டம் பாடசாலை ஆசிரியர் ஹிசாம் அவர்களின் நன்றியுரையை தொடர்ந்து மாணவன் முபாரக்கின் துஆ ஸலவாத்தோடு பொதுக்கூட்டம் இனிதே நிறைவுற்றது. 


இந்த பொதுக்கூட்டத்துக்கு பெருமளவான பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் , நலன்விரும்பிகளும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் இதர சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . 


மேலும் இந்த பொதுக்கூட்ட ஏற்பாட்டை பாடசாலையின் பத்தாம் ஆண்டு மாணவ மாணவிகளால் சகல ஏற்பாடுகளையும், களப்பணிகளையும் செய்து கொடுத்திருந்ததோடு இதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு பொறுப்பு வழங்குவதன் ஊடக ஈடுபாடு கொள்ள செய்யும் வினை விருத்தி ஈடுபாடாகவும் இதனை சந்தர்ப்பமாக வழங்கியமை சிறப்பம்சமாகும்.


தொகுப்பு

எம். ஆர். லுதுபுள்ளாஹ்












 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)