​நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவின் நிதியொதுக்கீட்டில் இலவச ஸ்கிரீன் பிரிண்டிங் பாடநெறிகள் (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


புதிய தொழில்முனைவோருக்கான பாதையைத் திறந்துவிடும் நோக்கில், முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் 4 நாட்கள் கொண்ட பிரயோக பயிற்சியுடன் கூடிய "ஸ்கிரீன் பிரிண்டிங்" (Screen Printing) பாடநெறிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் தொழில்முனைவோர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (Enterprise Development Officer) இந்த பயிலரங்குகளை ஏற்பாடு செய்துள்ளனர்.


இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் இரண்டு தனித்தனி பயிற்சிப் பட்டறைகள் பின்வருமாறு நடத்தப்படவுள்ளன:


பயிற்சிப் பட்டறை 01

திகதி: 2026 ஜூன் 16 (2026.06.16)

நேரம்: பிற்பகல் 2.30 மணி

இடம்: ஸ்ரீ சேதியாராமய, எகொட நிட்டம்புவ (வெலே பன்சல)


பயிற்சிப் பட்டறை 02

திகதி: 2026 ஜூன் 20 (2026.06.20)

நேரம்: முற்பகல் 9.30 மணி

இடம்: ஸ்ரீ ஜீனராஜ விகாரை, தன்விலான (வெயாங்கொடை - கலகெடிஹேன வீதி)


இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:


ஸ்கிரீன் பிரிண்டிங் துறையில் நடைமுறை அறிவையும் அனுபவத்தையும் வழங்குதல்.


புதிய திறன்களை மேம்படுத்துதல்.


சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்.


முற்றிலும் இலவசமாக நடாத்தப்படும் இந்த அரிய வாய்ப்பில் பங்கேற்று பயனர்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)