திஹாரிய, கலகெடிஹேன பிரதேசத்தில் ரம்புட்டான் வியாபாரிகளிடம் நாளாந்தம் 200 ரூபாய் வாங்கிய கப்பம் சரண - நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய மஹிந்த ஜயசிங்க

Rihmy Hakeem
By -
0


 "இன்று (09) சிறை சென்ற எமது மாவட்டத்தை சேர்ந்த சரண குணவர்தனவுக்கு மற்றுமொரு பெயர் இருந்தது கப்பம் சரண என்று. அவர் திஹாரிய, கலகெடிஹேன பிரதேசத்தில் இருக்கும் அப்பாவி ரம்புட்டான் வியாபாரிகள் 60 பேரிடமிருந்து ஒரு நாளைக்கு 200 ரூபா வீதம் மாதாந்தம் 360,000 ரூபா கப்பம் பெற்று வந்தார்" என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். 


நேற்றைய தினம் (09) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


"அவர் எந்தவொரு வியாபாரிக்கும் வியாபாரம் செய்ய விடவில்லை. கப்பம் பெற்று வந்தார்.


அவ்வாறான கப்பம் சரணவுக்கு இன்று 16 வருட சிறைத்தண்டனை கிடைத்துள்ளது. சில உறுப்பினர்கள் கூறியது போன்று நான்கு வருடம் அல்ல. நீதிமன்ற தீர்ப்பில் அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கான சிறைத்தண்டனை 4×4 = 16 வருடங்கள் ஆகும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)