கம்பஹா மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு அபாயம்: ஜூன் 13 இல் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

Rihmy Hakeem
By -
0

 


தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் மீண்டும் அதிவேகமாக பரவி வருவதாகவும் சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அதிக அபாயமுள்ள முதன்மை மாவட்டமாக கம்பஹா மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலாளர் எஸ். பி. குணவர்தன தெரிவித்துள்ளார்.


​கம்பஹா மாவட்ட செயலாளரின் 2026.06.08 திகதியிட்ட (கடித எண்: GAM/DIST/1/18/01) ஆலோசனைக் கடிதத்திற்கு இணங்க, கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து வரும் 2026 ஜூன் 13 சனிக்கிழமை அன்று விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


​இதன் கீழ், டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறியும் நோக்கில் வீடுகள் மற்றும் வளாகங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் குழுக்கள் மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

Picture - AI


​இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அதிகாரிகள் பலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டு, முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அத்தனகல்ல பிரதேச செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.



மேலும் தமது வீடுகளின் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்து டெங்கு நுளம்பு பரவுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)