அத்தனகல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று முன்தினம் (2026.06.25) முதல் தீவிர டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பிரதேச சபை தெரிவித்துள்ளது.
"டெங்கு ஆபத்திலிருந்து உயிர்களைக் காப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ், அத்தனகல்ல டெங்கு ஒழிப்பு குழுவின் முழுமையான கண்காணிப்பில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக திஹாரிய பிரதேசத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை படங்களில் காணலாம்.








