திஹாரிய பிரதேசத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் குப்பை முகாமைத்துவம்

Rihmy Hakeem
By -
0

 


திஹாரிய பிரதேசத்தை சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதற்காக திஹாரிய சுற்றுச்சூழல் மேலாண்மைக் குழு பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, வீதியோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடங்களை சுத்தப்படுத்தி, பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், குப்பை முகாமைத்துவத் திட்டம் பிரதேச சபையுடன் இணைந்து சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


தினசரி குப்பை சேகரிப்பு சேவையில் ஈடுபடும் வாகனங்கள் எந்தெந்த பகுதிகளுக்கு வருகின்றன என்பது தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக மக்களுக்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, குப்பை சேகரிப்பு வாகனங்களில் GPS கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், அவை எந்தப் பகுதியில் இயங்குகின்றன என்பதை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், குப்பை சேகரிப்பு வாகனங்கள் வருகை தருவதை மக்கள் எளிதில் அறிந்து கொள்வதற்காக ஒலிபரப்பு வசதிகளும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு சேவைகள் மேலும் இலகுவாக்கப்பட்டுள்ளன.


அதேவேளை, பிரதேச சபை ஊழியர்களுக்குத் தேவையான பல்வேறு நலன்புரி வசதிகளும் இந்த அமைப்பின் ஊடாக காலந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.


இத்திட்டங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நேத்ரா தொலைக்காட்சியின் ரூபவாஹினி அலைவரிசையில் ஒளிபரப்பாக உள்ளது.


இந்த வாய்ப்பை வழங்கிய ரூபவாஹினி நேத்ரா அலைவரிசையின் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு தயாரிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. முபாரக் முகைதீன்  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நன்றி.

மனாஸ்  மக்கீன்.

நிறைவேற்ற பணிப்பாளர்.

CaFFE  தேர்தல் கண்காணிப்பு அமைப்பு.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)