பாடசாலை மாணவர்களின் ஊடக எழுத்தறிவை மேம்படுத்த அரசாங்க தகவல் திணைக்களம் நடாத்தும் "அசிதிசி விதுமக" படைப்பாக்க போட்டித் தொடர் - 2026
பாடசாலை மாணவர் சமூகத்தின் ஊடக எழுத்தறிவு மற்றும் ஊடகம் சார்ந்த படைப்பாக்கத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் "அசிதிசி விதுமக பாடசாலை படைப்பாக்க போட்டித் தொடர் - 2026" இற்கான ஆக்கங்களைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் 2026 ஆகஸ்ட் 05 ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றன.
இம்முறை இப்போட்டித் தொடரானது 10 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விரிவுபடுத்தப்பட்டு நடாத்தப்படவுள்ளது.
முக்கிய தகவல்கள்:
- பங்குபற்றுபவர்கள்: அரச, பகுதியளவு அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 06 முதல் 13 வரையிலான மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்குபற்ற முடியும். பாடசாலை ஆசிரியர்களுக்காக விசேடமாக "சிறந்த ஆய்வுக்கட்டுரை" போட்டியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- வயதுப் பிரிவுகள்: கனிஷ்ட பிரிவு (தரம் 06 - 09), சிரேஷ்ட பிரிவு (தரம் 10 - 13) மற்றும் திறந்த பிரிவு.
- மொழிகள்: சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் போட்டிகள் நடாத்தப்படும் (சில போட்டிகள் மொழி வேறுபாடின்றி திறந்த அடிப்படையில் நடைபெறும்).
- விண்ணப்பிக்கும் இறுதித் திகதி: 2026 ஒக்டோபர் 15.
போட்டிப் பிரிவுகள்:
- சிறுகதைப் போட்டி
- திரைக்கதைப் போட்டி
- புகைப்படப் போட்டி
- அறிவிப்பாளர் போட்டி
- குறும்படப் போட்டி
- சிறந்த பாடசாலை ஊடக சஞ்சிகை
- சிறந்த பாடசாலை ஊடக வானொலிச் சேவை
- சிறந்த பாடசாலை Facebook பக்கம்
- சிறந்த பாடசாலை YouTube அலைவரிசை
- சிறந்த ஆய்வுக்கட்டுரை (ஆசிரியர்களுக்கு மாத்திரம்)
சமர்ப்பிக்கும் முறை:
படைப்பாக்கங்கள் மற்றும் பாடசாலை அதிபரினால் சான்றுபடுத்தப்பட்ட உரிய விண்ணப்பப் படிவங்களை பதிவுத் தபாலிலோ அல்லது போட்டிகளுக்குரிய மின்னஞ்சல் முகவரிகள் மூலமாகவோ அனுப்பி வைக்க முடியும்.
தபாலில் அனுப்புவோர் "அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, பொல்ஹேன்கொட, கொழும்பு 05" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடித உறையின் மேல் இடது மூலையிலோ அல்லது மின்னஞ்சலின் Subject பகுதியிலோ போட்டியின் பெயர், பிரிவு மற்றும் மொழியைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்புவது கட்டாயமாகும்.
வெற்றியாளர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்படும் என்பதுடன், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்த நடுவர் குழுவினால் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.
முழு விபரம் மற்றும் விண்ணப்பங்கள் - https://dgi.gov.lk/contact/asidisi-vidumaga-school-creative-competition---2026

