கஹட்டோவிட்ட MLSC இல் இடம்பெறவுள்ள முப்பெரும் விழா! 09A சித்தி பெற்ற கம்பஹா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன (விபரம்)

Rihmy Hakeem
By -
0


(ரிஹ்மி ஹக்கீம்)


கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் (Muslim Ladies Study Circle) ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் '9A' சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.


​இவ்விழாவில், மௌலவி எம்.என்.எம்.இஜ்லான் (காஸிமி) எழுதிய "ஹுப்புர் ரஸூல்" எனும் வானொலி உரைகளின் தொகுப்பு நூல் வெளியீடப்படவுள்ளது.


​9A மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா


​14வது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9A பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் பங்கேற்க, கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து 2025 (2026) சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி 9A சித்தி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


​தகுதியுடைய மாணவர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


​இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:


​சுயவிவரக் கூற்று (Bio Data)

​பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தல் கடிதம்

​G.C.E. (O/L) பரீட்சைப் பெறுபேற்று நகல்


​விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


​The President

Muslim Ladies Study Circle (MLSC)

No. 46/1, Ogodapola Road,

Kahatowita.


​விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கையளிக்குமாறு கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் தலைவரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)