வத்துபிட்டிலை ஆதார வைத்தியசாலைக்குத் தேவையான Hand Wash திரவங்களை வழங்கி வைத்த ரஸ்மியா ஏ. சமத் ; வைத்தியசாலை நிர்வாகம் பாராட்டு

Rihmy Hakeem
By -
0

 ஓகொடபொல, கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் திருமதி ரஸ்மியா ஏ. சமத், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு வழங்கிய மருத்துவப் பயன்பாட்டு நன்கொடையைப் பாராட்டி வைத்தியசாலை நிர்வாகம் உத்தியோகபூர்வ நன்றித் கடிதம் வழங்கியுள்ளது.


​ திருமதி ரஸ்மியா ஏ. சமத், வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் ஒரு தொகை கை சுத்திகரிப்பு திரவங்களை (Hand Wash) வைத்தியசாலை அதிகாரிகளிடம் அண்மையில் கையளித்தார்.


​இப்பங்களிப்பானது நோயாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், நன்கொடையாளருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)