அர்க்கம் முனீரின் முன்மொழிவுக்கு ஏகோபித்த ஆதரவு: வரலாற்றில் முதன்முறையாக நேரடி ஒளிபரப்பாகிய மாநகர சபை அமர்வு (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 

தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை கூட்டங்கள் நேரடி ஒளிபரப்பு: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றம்!



​தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபையானது தனது  சபை அமர்வுகளை நேரடி ஒளிபரப்பு (Live Stream) செய்ய உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் தனது சபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பும் முதல் மாநகர சபை என்ற வரலாற்றுப் பெருமையை தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை பெற்றுள்ளது.


​உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


​சமூக நீதி கட்சியின் தலைவரும், மாநகர சபை உறுப்பினருமான அர்க்கம் முனீர் அவர்களால் முன்வைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவு, சபையில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


​இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநகர சபை உறுப்பினர் அர்க்கம் முனீர், இந்த முன்மொழிவை ஏற்று ஆதரவளித்த கௌரவ மேயர், பிரதி மேயர், ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) அணியின் உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபையின் அனைத்து அதிகாரிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.


இந்நிலையில் இன்றைய தினம் (05) காலை 09.30 இற்கு ஆரம்பமாகிய தெஹிவளை கல்கிசை மாநகர சபை அமர்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)