மேல் மாகாண மட்டத்தில் முதலிடம்: திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபருக்கு 'மகுடம்' விருது
மேல் மாகாண தமிழ் மொழிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மகுடம் 2026' விருது வழங்கும் நிகழ்வில், அதிபர்களுக்கிடையில் நடைபெற்ற மேல் மாகாண மட்டப் போட்டியில் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ஜே.எம். ஃபுர்கான் அவர்கள் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
கல்வி, நிர்வாகத் திறன் மற்றும் பாடசாலை முன்னேற்றத்திற்காக ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் எம்.ஜே.எம். ஃபுர்கான் அவர்களின் இந்த சிறப்பான சாதனை, திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கும், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்ற அதிபர் எம்.ஜே.எம். ஃபுர்கான் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினரும், கல்வித்துறையினரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Thanks - Thihariya News


