வெற்றிகரமாக இடம்பெற்ற பூகொடை, குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடாத்திய 'கிடுகு விற்பனை'

Rihmy Hakeem
By -
0

 


பூகொடை குமாரி முல்லை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதியீட்டும் நோக்கில், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் (OBA) ஏற்பாடு செய்யப்பட்ட ‘கிடுகு விற்பனை’ நிகழ்வு கடந்த 16.08.2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


​இத்திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று கிடுகு டிக்கெட்டுகளைக் கொள்வனவு செய்த பூகொடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கஹட்டோவிட, உடுகொட, திஹாரிய, ஹங்வெல்ல, பாதுக்க, மல்வான, யடிஹேன, தல்துவ, எஹளியகொட உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நல் உள்ளங்களுக்கும் பழைய மாணவர் சங்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.


​மேலும், இந்நிகழ்வை ஆரம்பம் முதல் இறுதி வரை வெற்றிகரமாக முன்னெடுக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பூகொடை ஜும்மா மஸ்ஜித் நிர்வாக சபையினருக்கும், உடலாலும் பொருளாலும் உதவிகளைப் புரிந்த ஊர் ஜமாஅத்தினருக்கும் நிர்வாகத்தினர் நன்றி கூறினர். அத்துடன், கிடுகுகளை விநியோகம் செய்வதற்காகத் தாமாக முன்வந்து வாகன வசதிகளை ஏற்படுத்தித் தந்த அனைவருக்கும் பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கம் சார்பில் சிறப்பு நன்றிகள் உரித்தாக்கப்பட்டன.


​"உங்களின் இந்த ஆதரவும் பங்களிப்பும் எமது மாணவர்களின் கல்விப் பயணத்திற்குப் பெரும் பலமாக அமையும்" எனக் குறிப்பிட்ட பழைய மாணவர் சங்கத்தின் ஊடகப் பிரிவு (OBA Media Unit), பொதுமக்களின் இந்த நல் ஆதரவு என்றும் தொடர வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளது.


எம்.எப்.எம்.மபாஸ்


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)