வெற்றிகரமாக இடம்பெற்ற கஹட்டோவிட்ட வட்டாரத்தில் வெள்ள அனர்த்த தயார்நிலை குறித்த செயன்முறைப் பயிற்சி முகாம் (படங்கள்)

Rihmy Hakeem
By -
0

 


வெள்ளப்பெருக்கு அவசர கால பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பு


​அத்தனகலு ஓயா பெருக்கெடுப்பதன் காரணமாக, ஆண்டிற்கு பல முறை வெள்ளத்தில் மூழ்கும் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவு - கஹட்டோவிட்ட வட்டாரத்திற்கு உட்பட்ட 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அவசர நிலையொன்றின் போது எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பது குறித்த செயன்முறைப் பயிற்சி நிகழ்வொன்று நேற்றைய தினம் (02) குரவலான கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட திவாரி மண்டபத்தில் வழங்கப்பட்டது.


​இப்பயிற்சி முகாமில் அத்தனகல்ல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ருவன் மாபாலகம, கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், அத்தனகல்ல பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் அத்தனகல்ல பொலிஸ் நிலையம் என்பவற்றின் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)