இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 31வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜனாதிபதி செயலகத்தின் “Clean Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, Gen Z இளைஞர் தலைமுறையினரின் பங்களிப்புடன் நாடு முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 34 மருத்துவமனைகளில் பிரம்மாண்டமான தொழில்நுட்ப நவீனமயமாக்கல் மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டம் நேற்று முன்தினம் (17) நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வேலைத்திட்டத்திற்காக கம்பஹா மாவட்டத்தின் வத்துபிடிவலை ஆதார வைத்தியசாலையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததோடு, இம்மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் (17) காலை சிரமதான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வைத்தியசாலை வளாகம் மற்றும் சுற்றியுள்ள சூழலை சுத்தப்படுத்துதல், குளிரூட்டிகள் மற்றும் மின்சார உபகரணங்களை பழுதுபார்த்தல், மருத்துவமனை கட்டிடங்களின் சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இருந்த உடைந்த நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்களை பழுதுபார்த்தல் மற்றும் மருத்துவமனையின் வார்டுகளிலுள்ள கதவுகள், ஜன்னல்களை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்ட ஊடகப் பிரிவு - கம்பஹா









