தேசிய மீலாதுன் நபி விழாவுக்கு இணைந்ததாக இன்று இடம்பெற்ற "Welcome to our mosque", மூன்று மாடிக் கட்டிட திறப்பு நிகழ்வு மற்றும் கண்காட்சி

Rihmy Hakeem
By -
0



42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் 3 ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக் கொண்டு மூன்று முக்கிய நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தன.


தேசிய மீலாத் பாடசாலைக் கண்காட்சி


இன்றைய நிகழ்ச்சிகளின் தொடக்கமாக, நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள "தேசிய மீலாத் பாடசாலைக் கண்காட்சி" முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இவ்விழாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசிங்க, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, நீர்கொழும்பு மாநகர முதல்வர் துலிப் சாமர, பிரதி மாநகர முதல்வர் முகம்மட் பசீர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


நல்லிணக்க நிகழ்ச்சி: "Welcome to Our Mosque"


மத சகவாழ்வு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில், நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதான ஜும்மா பள்ளிவாசலில் "Welcome to Our Mosque" (எங்கள் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கிறோம்) என்ற சிறப்பு நல்லிணக்க நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கே.எஸ்.என். அபேசிங்க, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.


அல்-ஹிலால் வித்தியாலயத்தின் புதிய 3 மாடிக் கட்டிடம் திறப்பு


42 வது தேசிய மீலாதுன் நபி பிரதான அரச பெருவிழா நடைபெறவுள்ள நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலயத்தில், புதிதாகக் கட்டப்பட்ட 3 மாடி வகுப்பறைக் கட்டிடம் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.


இத்திறப்பு விழாவில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, பிரதி அமைச்சர்களான முனீர் முளப்பர், சுகத் திலகரத்ன, அரச அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.















கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)