விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இணையும் மள்வானை அல்-முபாரக் மாணவி செல்வி முஸ்னா முபாரக்

Rihmy Hakeem
By -
0

 



உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து வெளியிடவுள்ள விண்கலத்தை விண்வெளிக்கு பரீட்சார்த்தமாக அனுப்பும் முயற்சியின் ஒரு கட்டமாக குறித்த பயிற்சிப் பட்டறை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(Mission ShakthiSAT – Phase II (India Programme)

International STEM Leadership, Space Technology & Satellite

Development Programme)

இதில் உலகலாவிய ரீதியில் 108 நாடுகளில் இருந்து 14-18 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 200 பெண் மாணவிகள்  பங்கு கொள்ளவுள்ளனர்.


இவர்கள் குறித்த நாட்களில் இந்திய  விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து பயிற்சிப்பாசறையில் கலந்து இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர் 


குறித்த மாணவர்கள் இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விசேட பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளனர்.


இலங்கையின் பிரபல பாடசாலைகளில் இருந்து 20 மாணவிகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு, மள்வானையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட  மாணவி முஸ்னா முபாரக் மள்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியில் கடந்த முறை சாதாரண தரப்பரீட்சையில் 9A சித்தியை பெற்று தற்போது உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் (MASDA) கற்று வருகின்றார்.


குறித்த அரிய வாய்ப்பினை இந்த மாணவிக்கு பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் மற்றும் அதற்கான முழுமையான அனுசரணை வழங்கிய சர்வதேச செயற்பாட்டாளர் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி AL-Haj Dr.Mohamed Fazul JifryPhD, JP ஆவார். 


குறித்த மாணவர்கள் நாளை 26 இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளனர்.


இத்திட்டமானது இலங்கையின் விஞ்ஞான மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.


மூலம் - மள்வானை நியூஸ்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)