கிரியேட்டிவ் மீடியா நெட்வொர்க்கின் நான்காவது ஆண்டு நிறைவு விழா, மாபெரும் விருது வழங்கும் நிகழ்வு மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் குருணாகலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஊடகம், கலை, கல்வி மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கிய நிகழ்வு, கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி, குருநாகல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிரியேட்டிவ் மீடியா நெட்வொர்க், கிரியேட்டிவ் டிவி, கிரியேட்டிவ் இன்ஸ்டிடியூட் மற்றும் கிரியேட்டிவ் ஸ்டூடியோ CMN FOUNDATION ஆகியவற்றின் பணிப்பாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஒருங்கிணைப்பாளர் நிகழ்வின் ஏற்பாட்டாளருமான இஸ்மத் ஹுசைன் ஷாதிப் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக, நோட்டரி பப்ளிக், சத்தியப்பிரமாண ஆணையாளர் மற்றும் கம்பனி செயலாளர் சட்டத்தரணி மொஹமட் அஸ்லம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அவர்களில், FN Media Network நிறுவனத்தின் உரிமையாளரும், கேப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் சிரச தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் குருணாகல் மாவட்ட செய்தியாளரும், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் பணிப்பாளர் மற்றும் ஊடகப் பணிப்பாளர் ஊடகவியலாளர் A.W.M.பஸ்லான், HELP HAND TRUST LANKA நிறுவனத்தின் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் S.H.M. Rizwan, முன்னாள் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நலன்புரி அதிகாரியும், Al Haj M.R.M. Faiz, HELP HAND TRUST LANKA நிறுவனத்தின் தலைவி தேசகீர்த்தி பாத்திமா ருக்க்ஷானா மற்றும் NGT நிறுவனத்தின் இயக்குநரும் நிறுவனருமான அம்னா ஹலீம், சலாஹ் foundation நிறுவனத்தின் உரிமையாளர் RASMIYA A SAMAD உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவின் முக்கிய அம்சமாக, பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் தந்தையை இழந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு பாடசாலை உபகரணங்கள் RASMIYA A SAMAD உதவியுடன் வழங்கி வைக்கப் பட்டன.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் படைப்பாற்றல், தலைமைத்துவம், தொடர்பாடல் திறன் மற்றும் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் இடம்பெற்றன.
திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதுடன், புதிய தலைமுறையினருக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
அத்துடன், ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி, அவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கிரியேட்டிவ் மீடியா நெட்வொர்க் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவும் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள், விருதாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் கிரியேட்டிவ் மீடியா நெட்வொர்க் தனது நன்றிகளை தெரிவித்தது.

















