கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் மற்றும் MEPS ஏற்பாட்டில் முக்கிய பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவுக்கு அழைப்பு (விபரம்)

Rihmy Hakeem
By -
0


முப்பெரும் விழா – 2026 சிறப்பாக நடைபெற ஏற்பாடு


முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் (MLSC) கஹட்டோவிட்ட மற்றும் MEPS ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் "முப்பெரும் விழா – 2026" வரும் 2026 செப்டம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.  


இவ்விழாவில் பின்வரும் மூன்று முக்கிய நிகழ்வுகள் அரங்கேறவுள்ளன:  


மவ்லிதுன் நபி (ஸல்) மஜ்லிஸ்  


2025-இல் 9A சித்தி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா (கம்பஹா மாவட்டம்)  


"ஹுப்புர்-ரஸூல்" நூல் வெளியீடு – மௌலவி அல்ஹாஜ் M.N.M. இஜ்லான் (காஸிமி) எழுதிய நூல்  


நிகழ்ச்சி நிரல் விவரங்கள்:

முதல் அரங்கு (முற்பகல் 10.00): மவ்லிதுன் நபி மஜ்லிஸ் (மர்ஹூம் மௌலவி Y.L.M. புகாரி ஆலிம்ஸாஹிப் நினைவரங்கு).  


இரண்டாம் அரங்கு (முற்பகல் 11.15): 9A பாராட்டு விழா 2025 (மர்ஹூம் M.R. முஹம்மத் அரபாசிரியர் நினைவரங்கு).  


மூன்றாம் அரங்கு (பிற்பகல் 12.15): "ஹுப்புர் ரசூல்" நூல் வெளியீடு (மர்ஹூம் மௌலவி அல்ஹாஜ் M. நயீம் ஆலிம்ஸாஹிப் நினைவரங்கு).  


இந்நிகழ்வில் நூலாசிரியர் மௌலவி அல்ஹாஜ் M.N.M. இஜ்லான் (காஸிமி) அவர்களின் உரையும், MLSC கஹட்டோவிட்ட மற்றும் MEPS ஆகிய நிறுவனங்களின் தலைவரும், SLBC முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் M.Z. அஹ்மத் முனவ்வர் (J.P.) அவர்களின் நன்றியுரையும் இடம்பெறும்.  


 கலாநிதி A. அஸ்வர் அஸாஹீம் (அல்-அஸ்ஹரி)  தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வுகளில் பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் M.M. அப்துல் கபூர், கௌரவ அதிதியாக பிரதமர் அலுவலக மேலதிக செயலாளர் அல்ஹாஜ் A.B.M. அஷ்ரஃப் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷைக் H. உமர்தீன் (ரஹ்மானி) சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளதுடன், கேகாலை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்க் M.J.M. அக்ரம் ஜுனைத் நூல் விமர்சன உரை நிகழ்த்தவுள்ளார். 


சிறப்பு அதிதிகளாக மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலின் உப தலைவர் அல்ஹாஜ் A.H.M. மாஹிர் ஹஸன், அஸ்ஸெய்யித் நகீப் மெளலானா, அஸ்ஸெய்யித் ஃபலாஹ் மெளலானா, அஸ்ஸெய்யித் ஹனீஃப் மெளலானா உள்ளிட்ட பல முக்கிய சமூகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  


நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.  






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)