லெசோத்தோ தேசிய கிரிக்கெட் அணிக்கு கஹட்டோவிட்ட அல்-பத்ரியாவின் பழைய மாணவர் இன்ஷாப் தெரிவு!
கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்ட அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இன்ஷாப் பாரூக் ஆபிரிக்க நாடான லெசோத்தோவின் (Lesotho) தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நைஜீரியாவின் அபுஜாவில் (Abuja) எதிர்வரும் 2026 அக்டோபர் 18 முதல் 26 வரை நடைபெறவுள்ள 'ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று C' (ICC Men’s T20 World Cup Qualifier C) போட்டிகளுக்காக செல்லவுள்ள 14 வீரர்கள் கொண்ட லெசோத்தோ தேசிய அணியில் ஒருவராக இன்ஷாப் பாரூக் தெரிவு செய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
கேகாலை மாவட்டம், கன்னத்தோட்டையை சேர்ந்த இவர் 2008-ஆம் சாதாரண தர (O/L) வகுப்பை சேர்ந்த இவர், தனது தீவிர பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் கால்பதித்துள்ள இன்ஷாப் பாரூக்கின் இந்த சிறப்பான சாதனையைப் பாராட்டி, அல்-பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் (OBA) உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



