இமாம் அல் இத்ரீஸியும் உலகப் படமும் இலங்கையும் - ✍️ பஸ்ஹான் நவாஸ்

Rihmy Hakeem
By -
0

 


இமாம் அல் இத்ரீஸி ஸ்பெய்ன் நாட்டைச் சேரந்த புவியியலாளராவார். அவர்கள் கி.பி 1145ம் ஆண்டில் உலகப் படத்தை வரைந்தார்கள். இத்தாலியின் தென் பகுதியில் அமைந்துள்ள சிசிலி தீவின் மன்னர் இரண்டாம் ரோஜர் அவர்களின் அரச சபையில் இருந்தவாரே அவர் இந்த உலகப்படத்தை வரைந்தார்.  பதினைந்து வருட ஆய்வுகளின் பின்னரே உலகப் படம் வரையப்பட்டது. உலகப் படத்தில் இமாம் அல் இத்ரீஸி அவர்கள் ஏழு காலநிலை வலயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.  அவர்கள் எழுதிய  نزهة المشتاق في اختراق الآفاق‎ என்ற புத்தகததில் இது பற்றி விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.  


இமாம் அல் இத்ரீஸியின் உலகப்படத்தில் இலங்கை "سرنديب" "சரந்தீப்" (பச்சை நிறத்தால் வட்டமிடப்பட்டிருக்கின்றது) என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (இமாம் அவர்கள் இலங்கை வந்த போது 4ம் காஷியப்ப மன்னன் இலங்கையை ஆட்சி செய்துகொண்டிருந்தார்)  


இலங்கைக்கு கீழே இந்தியா "ஹிந்த்" என்று அரபியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


மத்திய தரைக் கடலும் நைல் நதியும் இதில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அல்லாமா இத்ரீஸியின் உலகப்பட்டத்தின் மூலப் பிரதிகளில் ஒன்று பிரான்ஸ் தேசிய நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 


© பஸ்ஹான் நவாஸ்

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)