களுத்துறை முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய பழைய மாணவியர் சங்கத்தின் அனுசரணையிலும் நெறிப்படுத்தலிலும் தமது பாடசாலைக்கு வழங்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்ட(SOLAR PANEL PROJECT) திறப்பு விழா கடந்த 12 .9 . 2026 சனிக்கிழமை காலை 9:00 மணியளவில் கல்லூரி அதிபர் திருமதி சாஜிதா மியாத் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது சுமார் 3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த செயற்றிட்டமானது, பாடசாலையின் பழைய மாணவிகள் சகலரினதும் பங்குபற்றுதலோடு இடம்பெற்றதோடு, இதில் பிரதம பேச்சாளராக பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் முதல்வர் அஷ் -ஷெய்க் AC அகார் முஹம்மத் கலந்து சிறப்பித்தார்.
மேலும் ஊரின் முக்கியஸ்தரும் பிரபல கல்வியாளரும் மொரட்டுவ பல்கலைகழகத்தின் முன்னாள் கணிதத்துறை தலைவருமாகிய கலாநிதி அல்ஹாஜ் MZM மல்ஹர்தீன், கல்லூரியின் முன்னாள் அதிபர்களான திருமதி நாஜிபா அமீர் ஹம்சா மற்றும் திருமதி ஷாஃபி அளவி, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் அல்ஹாஜ் ஹிஷாம் சுஹைல் உட்பட உறுப்பினர்கள், கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வானது ஏனைய பாடசாலைகளுக்கும் முன்மாதிரியான கொள்ளக்கூடிய ஒரு சிறந்த முன்னெடுப்பாகும் என பிரதம பேச்சாளர் கல்லூரியின் பழைய மாணவியர்களை தனது உரையில் பாராட்டியிருந்தார்.









