சென்னை புத்தகத் திருவிழாவில்...

42 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் மணிமேகலைப் பிரசுரத்தின் 42 நூல்களின் வெளியீட்டு விழா மிகக்கோலாகலமாக இடம்பெற்றது.இந்நிகழ்வில் எங்களூர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.ஒரே மேடையில் ஒரே தடவையில் 42 நூல்களின் முதற்பிரதி களையும் அவர் பெற்றுக் கொண்டார்.தலைமை வகித்த நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் தளபதி ராம்குமார்.மணிமேகலைப் பிரசுரத்தின் தலைவர் லேனா.தமிழ்வாணன் ஆகியோர் இணைந்து புரவலருக்கு நூல்களை வழங்கினர்.

திரைப்பட நடிகை கஸ்தூரி சிறப்பு அதிதியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன்,நடிகர்களான தியாகராஜன், டெல்லி கணேஷ், நடிகை ரேகா, இயக்குநர் தம்பி ராமையா ஆகியோர் விசேட அதிதிகளாக  கலந்து கொண்டனர்.

கலைஞர் கலைச் செல்வன்,ஊடகவியலாளர் தௌபீக் கனி,சமூக சேவகர் இம்ரான் நெய்னார் ஆகியோரும் சிறப்பு பிரதிகளைப்  பெற்றுக் கொண்டனர். முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றினர்.ரவி தமிழ்வாணனின் நெறிப்படுத்தலில திருமதி ஜெயசிறி சுந்தர் நிகழ்ச்சி களைத் தொகுத்து வழங்கினார்.பெருந்திரளான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.நிகழ்வுகளை இங்கே காணலாம்.












படங்கள்: தமிழகத்திலிருந்து இன்பாஸ் சலாஹுதீன்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.