அல்ஹாஜ் ருஷ்தி அவர்களின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ புண்யவன்ராமய விகாரை மதிலைப் பார்வையிட்டார் முன்னாள் ஜனாதிபதி


முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர் அல் ஹாஜ்  ருஸ்தி உஸ்மான் அவர்களின் முயற்சியினால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்களின் வேண்டுகோளின் படி "கம் பெரலிய" வேலைத்திட்டத்தின் கீழ் கஹட்டோவிட்ட, குரவலான பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ புண்யவன்ராமய விகாரையின் மதில் நிர்மாணம் செய்யப்பட்டது. ரூபா 500,000 நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இதனைப் பார்வையிட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க அவர்கள் சென்ற 23 ஆம் திகதி வருகை தந்ததுடன், அங்கு நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்தார். 

அத்தோடு சுதந்திரக் கட்சியின் கஹட்டோவிட்ட பிரதேச அமைப்பாளரும், 2018 அத்தனகல்ல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளருமான அல்ஹாஜ் ருஷ்தி உஸ்மான் அவர்களுடன், பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(கஹட்டோவிட்ட ரிஹ்மி)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here