தேசிய சரணாலயங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை, இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்

தேசிய சரணாலயங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை,  இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்

( மினுவாங்கொடை நிருபர் )


   தேசிய சரணாலயங்களுக்குச்  செல்வதற்கான அனுமதிச் சீட்டுக்களை,  இணையத்தளத்தினூடாகப்  பெற்றுக்கொள்ள முடியும் என,  வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
   இதன் முதற்கட்டமாக,  வில்பத்து தேசிய சரணாலயத்திற்கான அனுமதிச் சீட்டுக்கள், 14 ஆம் திகதி முதல்  வழங்கப்படுவதாக,  திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.
   இதன் பிரகாரம், வில்பத்து தேசிய சரணாயலத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், இணையத்தளம் ஊடாக  அனுமதிச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
   சுற்றுலாச்  செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே,  இணையத்தளம் ஊடாக, தமது அனுமதிச் சீட்டுக்களைப்  பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்,  வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனும் இணையத்தள முகவரியூடாக,  அனுமதிச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

( ஐ ஏ. காதிர் கான் )
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here