நேற்று பிணை வழங்கப்பட்ட 06 பேரும் இன்று விடுதலை


பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் நேற்று பிணை வழங்கப்பட்டு ஏனைய 06 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 

சம்பவத்தில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போது பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாத காரணத்தால் 06 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் பிணை நிபந்தனையை பூர்த்தி செய்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 06 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் டிபென்டர் வாகனத்தை ஓட்டிச் செலுத்திய ஓட்டுனரை மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உட்பட ஏழு சந்தேகநபர்களுக்கும் 5 இலட்சம் ரூபாவான இரண்டு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here