அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் தூர நோக்கமற்ற செயற்பாடுகளின் விளைவினால் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் வருமானம் ஈட்டித் தரும் மார்க்கங்களின் ஒன்றான சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் இத்தருணத்தில்
இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அவர்களினதும் கருத்துக்களை செவிமடுக்காது இவ்வாறு தன்னிச்சையாக அரசாங்கம் செயற்படுவது தமது தரப்பினரை பல்வேறு கோணங்களில் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கடந்த இரண்டு, மூன்று வருடங்களினுள் சுங்கத் திணைக்களத்தினுள் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வூழல் மோசடிகளுக்கு கீழ் பலம்வாய்ந்த அரசியல் வாதிகள் இருப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.