சுகாதார இராஜாங்க அமைச்சரின் உதவியுடன் கஹட்டோவிட்ட கிராமத்திற்கு வைத்தியசாலை ஒன்றைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமான கூட்டம் (படங்கள்)

கஹட்டோவிட்டாவின் நீண்டகால அரச   வைத்தியசாலைக்கான கனவு நனவாகும்  வேலைத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண  கூட்டம் நேற்று (11) அல் பத்றியாவில் நடைபெற்றது.

அண்மையில் எமது ஊருக்கு விஜயம் செய்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர், சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ பைசல் காசிம் அவர்கள் கஹட்டோவிட்ட தாய்மார் சேய் (கிளினிக்) இனை பார்வையிட்டார்கள்.

அத்தோடு அதன் குறைகளை கேட்டறிந்து அந்த இடத்தில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கும்  அங்குள்ள  குறைபாடுகளை நிவர்த்திக்கவும்  பத்து மில்லியன் ஒதுக்கீடு செய்வதாகவும் கூறியிருந்தார்கள்.

ஆனால் அந்த இடத்தின் இடப்பற்றாக்குறை காரணமாக வேறு ஒரு நிலப்பகுதியில் அதைவிட கொஞ்சம் விசாலமான இடப்பகுதி ஒன்றை பார்க்குமாறும் அப்படியான இடம் கிடைத்தால் அதன் நில வரைபு படத்தை உறுதிப்படுத்தி அனுப்புமாறும் அவ்வாறான 40பேர்சஸ் காணி கிடைக்கப்பெற்றால் அதிலே சுமார் 25மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்து கஹட்டோவிட்டாவுக்கு தேவையான ஒரு மினி வைத்தியசாலையொன்றை கட்டித்தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்கள்.

இதன் அடிப்படையில் காணியை இதற்காக எவ்வாறு பெற்றுக்கொள்வது இதை எவ்வாறு முன்னேற்றகரமாக காய்நகர்த்தி ஊருக்கு எவ்வாறு இந்த வைத்தியசாலையை பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் ஆராய விசேட கூட்டம் ஒன்று இன்று இரவு 8.30 மணியளவில் கஹட்டோவிட்ட அல் பத்றியா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் காணி தொடர்பாக இதற்கு தேவையான காணியை ஊரைச் சேர்ந்த தனவந்தர் ஒருவர் மனமுவந்து இதற்கான இடத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.அப்படி காணியை பெறுவதில் சிக்கல் ஏற்படின் ஊர்மக்கள் ஒன்றிணைந்து இதை எவ்வாறாவது பெற்று இந்த திட்டத்துக்காக பெற்றுக்கொடுப்போம் என்று சபையில் பெரும்பாலானோர் தெரிவித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதன் அடிப்படையில் அந்த காணியை வழங்கும் தனவந்தரே குறித்த முக்கிய நபர் ஒருவர் மூலம் தான் காணி வழங்குவதை உறுதியாக தொலைபேசியில் தெரிவித்ததை அடுத்து வைத்தியசாலைக்காக காணி தேடும்பணி முடிவுக்கு வந்தது.அதன் அடுத்த கட்ட வேலைகளை செய்வதற்கு கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் ஈடுபடக்கூடிய 15 பேரை வேலைக்குழுவாக தேர்ந்தெடுத்ததுடன் ஏனையவர்கள் அனைவரும் அதன் உறுப்பினர்களாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

காணி உறுதியை பரிசீலனை செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு சட்டத்தரணியும் வேலைக்கான குழு செயலாளர் சகோதரர் அஸ்லம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதை ஒவ்வொரு இடங்களுக்கும் ஓட்டம் எடுத்து ஆவணங்களை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை அல் ஹாஜ் ருஸ்தி அவர்களுக்கும் அல்ஹாஜ் பிர்தௌவ்ஸ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

வேலைக்குழுவின் தலைவராக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் அவர்களுடன் இணைந்து செயலாற்றும் அவரது நீண்ட நாள் தொடர்புடைய அல் ஹாஜ் நூருள்ளாஹ் நியமிக்கப்பட்டதுடன் அடுத்த கட்ட வேலைகளில் ஈடுபட இனிவரும் காலங்களில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டு கூட்டம் நிறைவு பெற்றது.

நிகழ்வின் இறுதியில் அல் ஹாஜ் இஸ்மாயில் அவர்களின் வீடு சென்று குறித்த காணியின் உறுதிவிபரங்களையும் காணியை இந்த நற்பணிக்காக  இலவசமாக வழங்கும் விடயத்தை உறுதிப்படுத்தி அதை ஊர்ஜிதம் செய்து கொள்ள சென்ற சகோதரர்களையும் கூட்டத்துக்கு வருகை தந்தவர்களையும் படங்களில் காணலாம்.(Luthufullah)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here