'பிரெக்ஸிட்' விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் நடந்த கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த
பிரித்தினிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது என இங்கிலாந்து கடந்த 2016 இல் முடிவு எடுத்தது. அப்போது நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதற்கமைவாக ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான 'பிரெக்ஸிட்' நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

அவர் இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஒரு தீர்மானம் வர உள்ளது.

இந் நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் 'திடீர்' திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒன்று, இரண்டாது பொது வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது பிரசல்சில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம். இதற்கு வழிவிட்டு பிரதமர் தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று பெரும்பான்மை மக்கள் விருப்பம் தெரிவித்து இருப்பது இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன் 49 சதவீத மக்கள், ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.  (VK)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.