( ஐ. ஏ. காதிர் கான் )


   மினுவாங்கொடை - கல்லொழுவை (கொமஸ் சொசைட்டி) வணிக சமூகத்தின் (GCS) அங்குரார்ப்பண நிகழ்வும், மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள்  வழங்கல்  வைபவமும், கொமஸ் சொசைட்டியின் தலைவர் ஆசிரியர் எம்.எஸ்.எம். பஸ்ரின் தலைமையில்,  கல்லொழுவை மர்லிய்யா வரவேற்பு மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றன. இதன்போது, கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று, பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவான மாணவ மாணவிகள், வணிக சமூகத்தினால் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

எம்.ஆர்.எம். ரஸான் (அல் அமான்),  எம்.எம்.எம். மப்கார் (அல் அமான்) ஆகிய மாணவர்கள், உயர்தர வணிகப் பிரிவிலும்  எம்.எப்.பாத்திமா பஸ்ஹானா (அல் அமான்), எம். பாத்திமா (அல் அமான்) ஆகிய மாணவிகள் உயர்தர கலைப்பிரிவிலும் எச்.பீ. பாத்திமா ஹில்மியா (கெக்குணகொல்ல தேசியப்  பாடசாலை) எனும் மாணவி உயர்தர விஞ்ஞானப் பிரிவிலும்  ஆகக் கூடுதலான புள்ளிகளைப் பெற்றமைக்காகவே,  இவர்களுக்கு நினைவுச் சின்னங்களும்,  சான்றிதழ்களும், பணப்பரிசில்களும்  வழங்கப்பட்டு,  இவர்கள் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.    இவர்கள், கல்லொழுவை அல் - அமான், கெக்குணகொல்ல தேசியக் கல்லூரி  ஆகியவற்றில் கல்வி பயின்ற, கல்லொழுவையைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   இந்தச் சிறப்பு நிகழ்வுகளில், கம்பஹா பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புஸ்ஸெல்ல, மினுவாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜீவக்க ராஜபக்ஷ், அல் அமான் அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம், பிரதி அதிபர் எம்.எம்.எம். றிம்ஸான், கல்லொழுவை பள்ளிவாசல்கள் நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். முனாஸ், பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மெளலவி எம். நிஸார் (பாரி),  மினுவாங்கொடை வலயக் கல்விக் காரியாலய தமிழ் மொழித்துறைக்கான இணைப்பாளர் ஏ.ஏ.எம். றிஸ்வி, கல்லொழுவை கல்வி அபிவிருத்தி நிதிய செயலாளர் எம்.ஜீ.எம். ஸியாத் மற்றும் கல்லொழுவை (கொமஸ் சொசைட்டி) வணிக சமூகத்தின்  அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கல்லொழுவையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வணிகம் படித்தவத்தவர்களின் சங்கமாக இது விளங்கி வருவதை,  விசேட அம்சமாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.








( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.