தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளை தோற்கடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்திற்கான யோசனையை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது. எனினும் இத் திட்டத்தை தோற்கடிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக உள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்திற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்பதை தெரிந்து கொண்டதாலே, அத்திட்டத்தை சபையில் சமர்ப்பிக்காமல் தாமதப்படுத்தி வருதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது உள்ள கட்சிகளை இணைத்து மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி கூறுவதானது, திருமணம் முடித்த ஒருவருடன் மீண்டும் திருமணம் முடிப்பதாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சியிலுள்ள நெருக்கடிகளை தீர்த்துக் கொள்வதற்காகவே தேசிய அரசாங்கம் அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஆர்வம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.