மாலியில் உயிரிழந்த இராணுவ உறுப்பினர்கள் இருவரின் சடலங்கள் இலங்கைக்கு


ஐ.நா., மாலி அமைதி காக்கும் பணியின் போது, உயிரிழந்த இராணுவ கெப்டன் உள்ளிட்ட இருவரின் சடலங்களும் இலங்கை கொண்டு வரப்பட்டுள்ளன.


மாலி நாட்டிற்கு ஐ.நா. அமைதி காக்கும் பணி நிமித்தம் சென்ற இலங்கை இராணுவ அணியின் கனரக வாகனங்கள் மீது தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த தாக்குதலில்இ கெப்டன் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரினதும் சடலங்களே தற்போது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இத்தாக்குதலின்போது சம்பவ இடத்திலேயே இலங்கை இராணுவத்தின் கெப்டன் ஒருவரும் படை வீரர் ஒருவரும் உயிரிழந்ததோடு, மேலும் மூவர் காயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here