(அஜ்மல் - கஹட்டோவிட்ட)

நீர் கொழும்பு Rising stars விளையாட்டுக் கழகத்தினர் தனது ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு ஏற்பாடு செய்த தாவூத் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 19ம் திகதி செவ்வாய்க்கிழமை நீர் கொழும்பு சென்மிசல்ஸ் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

விறுவிறுப்பாக இடம் பெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு Rising stars yellow மற்றும் Rising stars green அணியினறும் தெரிவாகினர்.
06 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Rising stars yellow அணியினர் ஒரு விக்கெட்டினை  மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு ஆடிய green அணியினர் 4.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.

67 ஓட்டங்களால் yellow அணியினர் வெற்றி பெற்று கிண்ணத்தினை சுவீகரித்துக்கொண்டனர்.
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக  சியாஸும்,போட்டித்தொடரின் சிறந்த வீரராக தஹ்ராபும் சிறந்த பந்து வீச்சாரராக சப்ரானும் தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டியின் பிரதம அதிதிகலாக நீர் கொழும்பு பிறாந்திய முன்னால் உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் அல்ஹாஜ் தாஜுதீன் மற்றும் அல்ஹாஜ் அஷ்ரப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
போட்டியினை திறன்பட நடாத்துவதற்கு Katunayaka glass house உறிமையாளர் அல்ஹாஜ் பிர்தெளஸ் அவர்களும் நாத்தாண்டிய new fancy jewelers உரிமையாளரும் rising stars ஸ்தாபகத்தலைவருமான அல்ஹாஜ் பாரிஸ் அவர்களும் பூரண அனுசரனை வழங்கினர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.