தொல் பொருட்­க­ளுக்கு சேதம் விளை­விப்­ப­வர்­க­ளுக்கு விதிக்­கப்­படும் தண்டப் பணம்  அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக, தொல் பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் பேரா­சி­ரியர் பி.பி. மண்­டா­வல தெரி­வித்­துள்ளார்.

தொல் பொருட்­க­ளுக்கு ஏற்­படும் சேதங்­களைக்  குறைக்கும் நோக்கில், இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இதன் பிர­காரம், இது­வரை காலமும் 50 ஆயிரம் ரூபா­வாக இருந்து வந்த தண்டப் பணம், ஐந்து இலட்சம் ரூபா வரை  அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை, தொல் பொருட்­க­ளுக்குச்  சேதம் விளை­விப்­ப­வர்­களுக்கு வழங்­கப்­படும் சிறைத்­தண்­டனைக் காலமும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இரண்டு வரு­டங்கள் அமுலில் இருந்து வந்த இச்­சி­றைத்­தண்­டனை, 5 முதல் 15 வரு­டங்கள் வரை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அவர்  தெரி­வித்­துள்ளார்.

கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் இது தொடர்­பி­லாக சமர்ப்­பிக்­கப்­பட்ட பத்­தி­ரத்­திற்கு, அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளதை அடுத்தே, குறித்த தண்­டப்­ப­ணங்­க­ளுக்­கான திருத்தம் மேற்­கொள்ளப் பட­வுள்­ள­தா­கவும், தொல் பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

1940 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான தொல் பொருள் கட்டளைச் சட்டம், இறுதியாக 1998 ஆம் ஆண்டு திருத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.