அரசாங்கத்துக்கு எதிரான கூட்டணிக்கு ஆதரவு வழங்குவோம்


அரசாங்கத்துக்கு எதிராக கட்டியெழுப்பப்படும்  எந்தவொரு கூட்டமைப்புக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்க தயாரென, அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று (10) தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன​ பெரமுன ஆகியன இணைந்து புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இருதரப்பினருக்கிடையில் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவிலும், இருதரப்பினருக்கிடையில் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக அறியமுடிகிறது.

(Tamilmirror)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here