நியூஸிலாந்து பள்ளிவாயல் துப்பாக்கி சூட்டு சம்பவம் பயங்கிரவாத்திற்கு இன, மதம் இல்லை என்பதை நிரூப்பித்துள்ளது- ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமியின் கிழக்காசிய நாடுகளின் அதி உயர் சபை உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்

இன்று நியூசிலாந்தில் இரண்டு பள்ளிவாயலில் ஜும்மா தொழுகைக்காக வருகைதந்தவர்களின் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதுடன் 40க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது மன்னிக்கமுடியாத மிக மோசமான கோழைத்தனமான சம்பவமாகும். இவ்வாறன பயங்கிரவாத செயலுக்கு இன,மத,மொழி,நாடு என்பது இல்லை என்பதை நிரூபித்துள்ளது என ராபிததுல் ஆலமி இஸ்லாமியின் கிழக்கு ஆசியாவிற்கு பொறுப்பான அதி உயர் சபை உறுப்பினர் கலாநிதி எம்.எல்.எ.ஏம் ஹிஸ்புழ்ழாஹ் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சஊதி அரபியாவில் உத்தியோர்பூர்வ விஜயம் செய்துள்ள கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் இன்று ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமி அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி அல் கரீம் ஈஸாயி அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந் நிலைமைகளை பற்றிபேசினார். அத்தோடு முஸ்லீம்களை பயங்கிரவாதிகளாக சித்தரித்தவர்கள் இன்று முஸ்லீம்களை கொல்லும் பயங்கிரவாத சூழ்நிலையை சர்வதேச உலகம் இன்று ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

நியூசிலாந்து அரசு மாத்திரம் அல்ல உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழுகிறார்களோ அவர்களின் மதக்கடமைகளையும் மதச்சுதந்திரத்தையும் அவர்களுக்கான அரசியல் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது அந்தந்த அரசுகளின் கடமையாகும். ஆகவே இது தொடர்பில் முஸ்லீம் வேர்ல்ட் லீக் உடனடியாக உலக நாடுகளின் தொடர்பை ஏற்படுத்தி இவ்வாறான பயங்கிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி முழு உலக மக்களை மீட்டெடுப்பதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டுமென்று கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் முஸ்லீம் வேல்ர்ட் லீக் செயலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் செயலாளரை சந்திக்கவுள்ளதாகவும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஊடக அறிக்கையில் இந்த பயங்கிரவாத சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்காலத்திலே முஸ்லீம்கள் மீதான தாக்குதல் நடத்தப்படுவது தடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சர்வதேசத்திற்கு சமர்பிக்கவேண்டுமென்று கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் முஸ்லீம் வேர்ல்ட் லீக் செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.