மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும்


மின் உற்பத்திக்கு பங்களிப்பு வழங்கிவரும், நீர்த்தேக்கங்கள் பலவற்றின் நீர் மட்டம், நாளுக்கு  நாள் குறைவடைந்து வருவதன் காரணமாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக, மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

தற்போது நிலவிவரும் வரட்சியுடனான வானிலை காரணமாக, மின்சாரத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சி​னைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், நாள் ஒன்றுக்கு 2 மின்குமிழ்களை ஒளிரவிடச் செய்யாது, மின்சாரத்தை சேமிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், இதன்மூலம் தினமும் 100 மெகாவொட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றார். தற்போது மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பாவிக்க வேண்டிய காலம் எழுந்துள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மின்சார துண்டிப்பு மேற்கொள்வதில்லையென தெரிவித்த அவர், இதற்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here