புகழ்பெற்ற துருக்கி கவிஞர்  மௌலானா ரூமி அவர்கள் எழுதிய 'மஸ்னவி' கவிதைத் தொகுப்பின் தமிழ் மொழி வெளியீட்டு  விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை (03) குருணாகல், வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

பஹீமிய்யா  பேரவையின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பேரவையின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய ஹாஜா பஹீமுல்லாஹ் ஷாஹ் ஜிஸ்திய்யுள் காதிரி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இது இடம்பெற்றது.  
சங்கைக்குரிய அப்துல் அஸீஸ் மௌலானா நிகழ்விற்கு தலைமை தாங்கினார். 

இந்திய  கலாசார  நிலையத்தின்  துணைத்தலைவர்  அல்ஹாஜ் முஹம்மத் மஃரூப் அவர்கள் நிகழ்வில் ' மஸ்னவியின்  மெய்யியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். மஸ்னவி பதிப்பாளர் அப்ழலுல் உலமா மௌலவி அபூதாஹிர் மஹ்ழரி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு  6 பாகங்களாக பிரசுரிக்கப்பட்ட மஸ்னவி தொகுப்பை அப்துல் அஸீஸ் மௌலானா அதிதிகளுக்கு வழங்கி வைத்தார்.  மௌலவி செய்ஹ் அப்துல்லா ஜமாலி அவர்கள் உரையும் நிகழ்வில் இடம்பெற்றது. 

ஹொங்கொங்கை சேர்ந்த அஹமத் ஸாலிஹ் மற்றும் ஷாஹூல் ஹமீத் ஆகியோரின் கஸீதாக்களும் நிகழ்வில் இடம்பெற்றன. புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் குழுவைச் சேர்ந்த சாஜித் கானின் இசையும் இடம்பெற்றது. இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பல பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டார்கள். 
















(பஸ்ஹான் நவாஸ், கஹட்டோவிட்ட ரிஹ்மி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.