சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் இடம்பெற்ற இச்சம்பவமானது எனக்கும் சாய்ந்தமருது மக்களுக்கும் இருக்கின்ற புனிதமான உறவினை ஒரு போதும் பாதிப்புகுள்ளாக்காது. எமது கட்சியின் அமைப்பாளர் பிர்தௌஸ் அவர்களின் தாய் வீட்டில் நடைபெற்ற வட்டார கிளைக்குழு கூட்டத்தில் சமூகமளித்த வேலை கூட்டத்தினை குழப்பிக்கொண்டிருந்த சில பிழையான வழி நடாத்தப்படுகின்ற இளைஞர்களினால் எனது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. அதாவது பின்னாலிருந்து கல்வீச்சு நடாத்தப்பட்டு எனது வாகனத்தின் பின் கண்ணாடி முற்றாக சேதமடைந்தது.

ஒரு பக்கம் இனவாதத்தாலும், ஒரு பக்கம் பிரதேச வாதத்தினாலும் அழிந்து போகும் ஆபத்திலிருக்கின்ற கல்முனையின் அடையாளம் இன்னுமொரு சில காலத்திற்காவது பாதுகாக்கப்பட வேண்டும் என்று உண்மையான நல்லெண்ணங்களுடன் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இப்பயணத்தில் இவ்வாறான நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட வேண்டியிருக்கின்றது. ஏனெனின் கல்முனையின் அடையாளமும் முஸ்லிம் தேசியத்தின் எதிர்காலமும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்துள்ள விடயங்களாக காணப்படுகிறது. பிழையாக வழி நடாத்துகின்றவர்களுக்கு அவர்கள் எவ்விதமான போர்வையில் இருந்த போதும் சமூகமும் எதிர்காலமும் திட்ட வட்டமாக சரியாக கணிக்கும். அல்லாஹ் ஜல்ல சுபஹானவுத்தாஆலா எம்மனைவரையும் நேர்வழி செலுத்த போதுமானவன்..

(சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.