சில அமைச்சுக்களின் விடயப்பரப்பில் சிறு மாற்றங்கள்


இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

மார்ச் மாதம் 07ம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 

இதுதவிர இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தை அமுலாக்குவதும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 

வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இந்த வர்த்தமானி ஊடாக நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஶ்ரீலங்கா டெலிகொம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here