வாகன சாரதிகள் இழைக்கும் 07 தவறுகளுக்காக 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனை வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு வௌியடப்பட்ட வர்த்தமானியில் இது தொடர்பான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், அனுமதிப்பத்திரம் அற்ற ஒருவரை சாரதியாக நியமித்தல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல், அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல், இடது பக்கத்தால் முந்திச் செல்லுதல் உள்ளிட்ட தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்க அனுமதி கிட்டியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.