வாழைச்சேனையில் நடந்த கொடூரம் : உயிருடன் எரிக்கப்பட்ட நபர்

மட்டக்களப்பு, வாழைச்சேனை, விநாயகபுரம் பகுதியில் வீதியில் ஆண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டதில் அவர் தீப்பற்றி எரிந்து கருகி உயிரிழந்துள்ளதுடன் தீயிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று (04) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர் . 

கண்ணகிபுத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே இவ்வாறு எரிந்து உயிரிழந்துள்ளார். 

விநாயகபுரம் 9 ம் குறுக்கு வீதியில் மதுபோதையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டை ஏற்பட்டுள்ளது. 

இதன்போது கீழே வீழ்ந்த குறித்த நபர் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்ததில் அவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து தீயிட்டவர் தப்பியோட முயற்றித்தபோது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பாலசுப்பிரமணியம் ரஞ்சன் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (AdaDerana)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here