சிங்கள மக்களின் வளர்ச்சி வேகம் மிகவும் குறைந்துள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வளர்ச்சி வீதம் 0.5 ஆக மாறியுள்ளதாகவும் சிரேஸ்ட விரிவுரையாளர் தெரிபெஹ மேதங்கர தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு அகிலக இலங்கை பௌத்த சம்மேளனத்தில் பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவில் வாக்கு மூலம் வழங்கும் போது இதனைக் கூறியுள்ளார்.
கல்வி தொடர்பிலான அறிக்கையொன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப, 2020 ஆகும் போது சிங்களவர்களின் வளர்ச்சி வீதம் சூனியமாக மாறும் எனவும், நாமிருவர் நமக்கிருவர் என்ற அடிப்படையில் சிங்களவர்களின் குடும்பங்கள் மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2020 ஐத் தாண்டும் போது சிங்களவர்களின் வளர்ச்சி வேகம் சூனியமாக மாறிவிடும் எனவும், அப்படியாயின் சிங்களவர்கள் அருகி வருவதாகவும் தேரர் எடுத்துக் காட்டியுள்ளார்.
நாட்டின் பெரும்பான்மையாகவுள்ள சிங்களவர்கள் ஒற்றுமையின்றி காணப்படுவதாகவும், சிங்களவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அந்த ஒற்றுமையின்மை காரணமாக அமைவதாகவும் தேரர் ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தேரரிடம் சாட்சிகள் பதிவு செய்ததன் பின்னர் கருத்துத் தெரிவித்துள்ள, பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைக்கான முன்னாள் பிரதிநிதியுமான கலாநிதி பாலித கொஹன,
சூச்சுமமான முறையிலும், மூலோபாயங்களை கையாண்டும் மிகுந்த யோசனையோடு நாட்டில் பௌத்தர்கள் செயற்பட வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அவ்வாறு நாம் செயற்படாது போனால், நாட்டிற்குள்ளும், சர்வதேசத்திலும் பிரச்சினைகளை நாம் முகம்கொடுக்க வேண்டி வரும் எனவும் பாலித கொஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சி கூறியுள்ள சிரேஸ்ட விரிவுரையாளர் தெரிபெஹ மேதங்கர தேரர், பௌத்த உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரிவான சான்றுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று கூறியுள்ளது.  
(Daily Ceylon)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.