திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகிறதுதிருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான அனுமதிப் பத்திரம் இன்று (05. 04. 2019) தொடக்கம் வழங்கப்படுகின்றது
***********************************************
திருகோணமலை மாவட்ட மீனவர்களின் பிரச்சினை சம்மந்தமாக சென்ற வாரம் என்னால் எடுத்த முயற்சியின் பயானாக கடந்த                  29. 03. 2019ம் திகதி வெள்ளிக்கிழமை மீன்பிடி திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் திருகோணமலை உதவிப் பணிப்பாளருக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான உத்தரவு பிரப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் உதவிப் பணிப்பாளர் அத் தொழிலைச் செய்கின்ற கிண்ணியா, ஜமாலியா, வெள்ளைமணல் மற்றும் ஏனைய பிரதேச மீனவர்களின் சகல பாவிக்கின்ற வலைகள் அனைத்தையும் கடந்த 4 நாட்களாக பரிசோதனை செய்து முடித்துவிட்டு இன்று       (05. 04. 2019) தொடக்கம் அதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது. இவ் அனுமதிப் பத்திரம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை வழங்கப் பட்டிருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் இக் காலப் பகுதிக்குள் அனுமதி பத்திரம் இல்லாமல் மீன் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


M.S.தௌபீக்,
பாராளுமன்ற உறுப்பினர்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here