புத்தாண்டு சீசனில் சீரான நீர் விநியோகம்


நீர் விநியோகத்தில் தற்பொழுது அடிக்கடி தடைகள் ஏற்பட்ட போதிலும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் இந்த தடை ஏற்படாத வகையில் நீர் விநியோகம் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

பொருத்தமான வகையில் முகாமைத்துவம் செய்து இக்காலப்பகுதியில் அனைத்து பிரதேசங்களுக்கும் தொடர்ச்சியாக நீர் விநியோகிக்கப்படும் என்று நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

தற்பொழுது நிலவும் வரட்சிக்கு மத்தியில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருகின்றது. இதனால் தொடர்ச்சியாக சீரான அழுத்தத்துடன் நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகின்து. 

மின்சார தடை ஏற்பட்டால் நீர் விநியோகத்திலும் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படும். தற்பொழுது நிலவும் வரட்சி காலநிலைக்கு மத்தியில் எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் சில பிரதேசங்களில் அடிக்கடி நீர் விநியோகம் குறைந்த அழுத்தம் அல்லது தடைப்பட கூடும் என்றும் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here