புனித குர்ஆனின் சிங்களப் பிரதி வெளியீட்டு வைபவத்தில் ஜனாதிபதி

பேசும் மொழியை அடிப்படையாகக் கொண்டு  மக்கள் பிளவுபடாதிருக்க சகல அரசியல்வாதிகளும் கட்சி பேதமின்றி பணியாற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்தார்.

புனித குர்ஆனின் சிங்களப் பிரதிகளை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு பேசிய அவர்,

சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட புனித அல்குர்ஆன் நூலை வெளியிடுவதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இஸ்லாத்தின் வரலாறு தொடர்பில் புரிந்து கொள்வதற்கும் முஸ்லிம் மக்களின் கலாசாரம் மற்றும் மதப் பின்புலம் தொடர்பில் ஏனைய மதத்தினரும் புரிந்துகொள்ளக் கூடியவாறு சிங்கள மொழியில் அல்குர்ஆனை மொழிபெயர்த்திருப்பது சிறப்பம்சமாகும்.  

மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக அமைந்துள்ளது.

புரிந்துணர்வு, நம்பிக்கையின் அடிப்படையிலே சகல இன, மதத்தவர்களும் பிளவுபடுவதைத் தடுக்க முடியும். புனித அல்குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்தமை நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு பாரிய பங்களிப்புச் செல்லுத்தும்.

மொழியை அடிப்படையாக்கொண்டு பாடசாலைகளை வகைப்படுத்தும் நடவடிக்கைகளையும் நிறைவுசெய்ய வேண்டும்.

இதற்கிணங்க தனது எண்ணக்கருவில் பொலனறுவையில் நிர்மாணிக்கப்பட்ட மும்மொழி தேசிய பாடசாலை வேலைத்திட்டத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உட்பட பெரும் திரளான இஸ்லாமிய அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.